கோவையில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் நாளை
நடைபெறுகிறது.
மகளிர் மற்றும் மாற்று திறனாளிகள் சிறு
தொழில் நிறுவனங்களை துவக்குவதற்கான ஆறு வார பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில்
பங்கேற்பவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.
சிறந்த முறையில் பயிற்சியை முடித்து தொழில்
துவங்குபவர்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் கடனுதவிக்கு பரிந்துரை செய்யப்படும்.
இம் முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர், தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டிய முகவரி:
‘உதவி இயக்குநர் கயல்விழி,
எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிலையம், பட்டேல் ரோடு,
ராம்நகர், கோவை.
குறைந்த பட்ச கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதுக்கு மேல் 45க்குள் இருக்க வேண்டும்.
நாள்: அக். 24, 2013
நேரம்: காலை 10 மணி
இடம்: எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிலையம், பட்டேல் ரோடு, ராம்நகர், கோவை.
No comments:
Post a Comment