குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவங்களின் மேம்பாட்டுக்கான இலவச ஆலோசனை கருத்தரங்கம் கோவை அவினாசி
ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் வணிக கடன்
நிறுவனங்கள், வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டு கருத்து விளக்கம் அளிக்கின்றன.
இந்த ஆலோசனைகள் மூலம் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இதுதவிர பல்வேறு
சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வெற்றி ரகசியம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இலவசமாக நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கலந்து
கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை இந்தியா எஸ்.எம்.இ., கோ-இண்டியா, கொசிமா ஆகிய அமைப்புகள்
செய்துள்ளன.
No comments:
Post a Comment