பண்டிகை காலத்தில் உடைமைகள் பத்திரம்
பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
வரும் நாட்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, பக்ரீத், தீபாவளி என, அடுத்தடுத்து
பண்டிகைகள் அணிவகுக்க உள்ளன. பண்டிகைகளை வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
பண்டிகைகளுக்கு தேவையான துணி மணிகள், பொருட்களை வாங்க முக்கிய கடை வீதிகளில்
மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில், பண்டிகை காலத்தை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் திருட்டு
சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வழிப்புணர்வுடன் இருக்க
வேண்டும் என, போலீசார் நோட்டீஸ் வழங்கி எச்சரித்து வருகின்றனர்.
நோட்டீசில்," பண்டிகைகள் நெருங்குவதால், வெளியூர் பயணங்களின் போது வீட்டுக்கு
அருகில் உள்ளவர்களிடமும், போலீஸ் நிலையத்திலும் தகவல் கொடுத்து செல்வது நல்லது. பெண்கள் அதிகமாக நகை அணிந்து வெளியே செல்வதையும், அறிமுகம் இல்லாத
நபர்களிடம் நகை, பணம் குறித்து பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.
சந்தேகம்படும்படியாக புதிய நபர்கள் நடமாடினால், போலீசுக்கு தகவல் தர வேண்டும்.
நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பஸ் பயணத்தின் போதும், கடை வீதிக்கு
செல்லும்போதும் பைகளில் வைத்து செல்ல வேண்டாம். வங்கி பணப் பரிவர்த்தனைகளின் போது, யாராவது தானாக
முன்வந்து உதவி செய்தால், உஷாராக இருக்க வேண்டும். வங்கியில் பணம் எடுத்தால், நேராக வீட்டுக்கு
செல்ல வேண்டும்; இடையில் எங்கும் நிற்கக் கூடாது. பண்டிகை கூட்ட நெரிசலில், இருசக்கர வாகனங்களை
பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி சரியாக பூட்ட வேண்டும்”.
"போலீஸ் போன்று நடித்து நகை பறிக்கும் நபர்களிடம் மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாராவது தங்களை போலீஸ் என்றால், அவர்களிடம் அடையாள
அட்டை போன்றவற்றை கேட்டு சரிபார்க்க வேண்டும். வீடுகளை வாடகைக்கு விடும்போது, நன்றாக விசாரித்து
நிரந்தர முகவரி உட்பட அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்வது நல்லது. வியாபாரம்
மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வாட்சுமேன்களை நியமிப்பது நல்லது' என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமராஅலாரம் அவசியம்தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களில் திருட்டு போகாமல் பாதுகாக்க கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரம் பொருத்தி பாதுகாக்கலாம். தற்போது சென்சார் கேமராக்களும் மிக குறைந்த விலைகளில் கிடைக்கின்றன. கதவு, ஜன்னல் உள்பட
அனைத்து இடங்களிலும் பொருத்த அலாரங்கள் கிடைக்கின்றன. இந்த அலாரங்களுடன், மொபைல்போன்களை இணைத்து "அலர்ட்' செய்யும்
தொழில்நுட்பங்களும் எளிதாக கிடைக்கின்றன. லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை
வைத்துள்ளவர்கள், சில ஆயிரக் கணக்கில் கிடைக்கும் கேமரா மற்றும் அலாரங்களை
பொருத்த தயங்கக்கூடாது” என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment