தீபாவளியையொட்டி, சிறப்பு
ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது.
சிறப்பு
ரயில்கள் விவரம்:
மதுரை - சென்னை எழும்பூர் சூப்பர்
பாஸ்ட் சிறப்பு ரயில் (06748) மதுரையில்
இருந்து வரும் 31-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை வந்து சேரும்.
சென்னை எழும்பூர் - நெல்லை (06747) சிறப்பு ரயில் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 1-ம் தேதி காலை 10.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 2.30 மணிக்கு நெல்லை போய்ச் சேரும்.
நெல்லை - சென்னை எழும்பூர்
சூப்பர்பாஸ்ட் (06749) சிறப்பு ரயில்
(திருச்சி, விருத்தாசலம் வழியாக) நெல்லையில்
இருந்து நவம்பர் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்து சேரும்.
கோவை - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட்
சிறப்பு ரயில் (06626) கோவையில் இருந்து
நவம்பர் 1-ந் தேதி மற்றும் 4-ந் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 8.30 மணிக்கு சென்னை வந்துசேரும்.
சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு
ரயில் (06625) சென்னையில்
இருந்து நவம்பர் 1-ம் தேதி பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு அதேநாளில் இரவு 9 மணிக்கு கோவை போய்ச்சேரும்.
No comments:
Post a Comment