தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க
திருத்தப் பணி, இம்மாதம் முதல் தேதி துவக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல்
தேதி, 18 வயது
பூர்த்தியானவர்களை தகுதியுடையவராகக் கொண்டு, வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நடந்து வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் இம்மாதம், 30ம் தேதி வரை
நடைபெறும்.
பொதுமக்கள் வசதிக்காக, விடுமுறை நாட்களில்
(ஞாயிற்றுக்கிழமை), அனைத்து ஓட்டு சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வழக்கம்
போல், உள்ளாட்சி
அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், பெயர் சேர்க்க, நீக்க
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ஆன்-லைனில்
விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், லேப்டாப் வசதி
இல்லாதோர், இணையதள மையங்களுக்கு
சென்று, ஆன்-லைனில்
விண்ணப்பிப்பதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதள
மையங்களுக்கு, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, ஆன்-லைனில்
விண்ணப்பிப்போர், தங்கள் விண்ணப்பத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது
என்ற விவரத்தையும், ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பிக்க மற்றும்
விண்ணப்பித்ததை சரிபார்க்க, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள்
பெயர் உள்ளதா என்பதையும், ஆன்-லைனில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment