Friday, 18 October 2013

டிப்ளமோ தேர்வு விண்ணப்பம் வரவேற்பு


பாரதியார் பல்கலைக்கழகம்

டிப்ளமோ தேர்வு விண்ணப்பம் வரவேற்பு

பாரதியார் பல்கலையின் கீழ் இயங்கும் சமுதாய கல்லூரிகளின் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பாரதியார் பல்கலையின் கீழ் இயங்கும் ஏழு சமுதாய கல்லூரிகளில், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு, டிசம்பரில் நடக்கிறது. தேர்வெழுதும் மாணவர்கள், நவ., 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; 100 ரூபாய் அபராதத்துடன் நவ., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.


விண்ணப்ப கட்டணங்கள்:

எழுத்துத் தேர்வு - 65 ரூபாய்
செய்முறை தேர்வு - 130 ரூபாய்
மதிப்பெண் பட்டியலுக்கு - 75 ரூபாய்
 விண்ணப்ப கட்டணம் - 25 ரூபாய்
 தபால் செலவுக்கு - 100 ரூபாய்
டிப்ளமோ சான்றிதழ் கட்டணம் - 300 ரூபாய்

வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி:
பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை 46

வரைவோலையை , பூர்த்திசெய்த விண்ணப்பத்துடன் இணைத்து தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:
தேர்வாணையர்,
பாரதியார் பல்கலைக் கழகம், கோவை 46.

குறிப்பு: விண்ணப்பம் அனுப்பும் தபால் உறையின்மேல் சமுதாய கல்லூரி தேர்வுக்கான விண்ணப்பம் என குறிப்பிட வேண்டும்.

எழுத்துத்தேர்வுக்கு பின்னர் செய்முறைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: நவ. 11, 2013

அபராதத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: நவ. 15, 2013

No comments:

Post a Comment