Friday, 18 October 2013

பயிற்சி வகுப்புகள்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

பயிற்சி வகுப்புகள்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து நெல்லி பானங்கள், நெல்லி ஜாம், ஜெல்லி, பட்டர், நெல்லி மிட்டாய், நெல்லி துருவல் போன்றவை தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

மேலும், சுயதொழிலாக இதனை மேற்கொள்ள விரும்புவோருக்கு தொழில் உரிமம் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் ரூ.1000/- செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இயலாதவர்கள் பயிற்சிக் கட்டணத் தொகையை வரையோலை எடுத்து அனுப்பலாம்.

வரையோலை எடுக்க வேண்டிய முகவரி:
முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி

கோவை பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரையோலை எடுக்க வேண்டும்.

வரையோலை அனுப்ப வேண்டிய தபால் முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை.

பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள்: அக். 23 மற்றும் 24, 2013
இடம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை.


No comments:

Post a Comment