Wednesday, 30 October 2013

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ’அப்பாயின்மென்ட்' அவசியம்

வரும் நவ.1, 2013 லிருந்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிப்பவர்கள் அனைவரும், ஆன்லைன்' மூலமாக அப்பாயின்மென்ட்' பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்வதற்கு வழங்கப்படும் "போலீஸ் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் விண்ணப்பிப்போர்க்கு மட்டும், ‘அப்பாயின்மென்ட்' பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பிரிவினரும், 24 மணி நேரத்துக்கு முன்பாக, "ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்து விட்டு, ‘ஏ.ஆர்.என்.,' எனப்படும் அப்ளிகேஷன் ரெபரன்ஸ் நம்பர்' ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனுடன் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு, மறுநாள் காலையில் கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கு காலை 9.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள் நேரில் செல்ல வேண்டும்.

மற்றவர்கள், ஆன்லைன்' மூலமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ’அப்பாயின்மென்ட்' பெற்ற பின், அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாட்களில் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பி.சி.சி.,விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை, காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள், ’முதலில் வருவோர்க்கு முன்னுரிமைஎன்ற அடிப்படையில், அனுமதிக்கப்படுவர். அதன்பின், மற்ற பிரிவினருக்கு டோக்கன் வழங்கப்படும்.


சந்தேகங்களுக்கு, 0422-230 1415, 2200 250, 230 6111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment