Wednesday, 9 October 2013

தொழில் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்(சிட்ரா)

தொழில் பயிற்சி

கோவையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்(சிட்ரா) சார்பில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கான வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

நாள்: 2013, அக். 21 முதல் நவ., 20 வரை.

பயிற்சி வகுப்புகள்:

      1. கல்சர், ஏர்ஜெட்,ரேப்பியர் தறிகளில் பிட்டர் பயிற்சி -  ஒரு மாதம்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெற தவறியவர்கள். 
வயது வரம்பு: 18 வயதுக்கு மேல், 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


2. நாடா இல்லா தறிகளில் வீவர் பயிற்சி - ஒரு மாதம்.

கல்வித் தகுதி: ஆறாம் வகுப்பு.
வயது வரம்பு: 18 வயதுக்கு மேல், 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இவ்விரு பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
நாள்: அக். 14 & 15, 2013
இடம்: சிட்ரா வளாகம், அவிநாசி ரோடு,  கோவை.

கல்வி தகுதி சான்றிதழ், ஜாதி, வருமான சான்றிதழ்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான போட்டோ, ஐந்து ரூபாய்க்கு சுயமுகவரி எழுதிய தபால்உறை உள்ளிட்டவற்றை நேர்காணலில் பங்கேற்போர் கொண்டிருத்தல் வேண்டும். அசல் மற்றும் நகல் எடுத்து வர வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் தலா 400 ரூபாய் வீதம் பயிற்சிகால உதவித் தொகை வழங்கப்படும். முடிவில், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.


மேலும் விபரங்களுக்கு, 0422-257 4367,257 4368, 257 4369 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




No comments:

Post a Comment