Wednesday, 16 October 2013

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு சாதாரண செல்போன் போதும்

இணைய வசதி இல்லாமலேயே மொபைல் போன் மூலம் ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தி உள்ளது.

கீழ்க்கண்ட வகைகளில் செல்போனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

வகை 1:

‘ஏர்டெல்’ சேவையில், ப்ரீபெய்டு கார்டு ரீசார்ஜ் செய்வது போல முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அல்லது, ஆன்லைன் மூலம் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை டிரான்ஸ்பர் செய்து அதை ஏர்டெல் மணி அக்கவுன்டில் போட்டு அதன் மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம்.

ஏர்டெல் எண்ணில் இருந்து *400# என்ற எண்ணுக்கு டயல் செய்து படிப்படியாக முன்பதுவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே கொடுக்கப்பட்டிருக்கும் ரகசிய எண்ணை வைத்து பயணச்சீட்டை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு ஸ்மார்ட் போன் தேவையில்லை. ஆன்லைன் வசதியும் தேவையில்லை. சாதாரண செல்போன் போதும்.

வகை 2:

139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி பயணச்சீட்டு பெறும் முறை இது. இந்த சேவைக்கும் இணைய வசதி தேவையில்லை. இந்த சேவையை எந்த மொபைல் கொண்டும் புக் செய்யலாம். உங்கள் வங்கிக் கணக்கின் மூலம் ஐ.எம்.பி.எஸ். (இம்மீடியட் பேமன்ட் சர்வீஸ்) வழியே ஒருமுறை பாஸ்வேர்டு (OTP) வாங்கிக்கொண்டு, செல்போன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பயணச்சீட்டு பெறலாம். செல்போனில் 139 எண்ணை தொடர்புகொள்ளும்போது, ஒரு டிரான்ஸர் ஐ.டி கிடைக்கும். அந்த எண்ணுக்கு பாஸ்வேர்டை அனுப்பி டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வகை 3:


இந்த சேவையை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஜாவா சாப்ட்வேரை டவுன்லோடு செய்து, ஆந்திரா வங்கிக் கணக்கு மூலம் மட்டும் பயணச்சீட்டு பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment