இளம்பெண் விஞ்ஞானி விருது மற்றும் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற, அறிவியல் துறையில், சாதனை புரிந்த, பெண்களிடம் இருந்து, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அறிவியல்
நகரம் என்ற தன்னாட்சி நிறுவனம், உயர்கல்வித்துறை கீழ் உள்ளது. இந்நிறுவனம், அறிவியல்
தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்த, ஆண்டுதோறும், தமிழகத்தில் உள்ள, பெண் அறிவியலாளர்களை, தேர்வு செய்து, இளம்பெண் விஞ்ஞானி
விருது மற்றும் பெண் விஞ்ஞானிகளுக்கான, வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி
வருகிறது.
வேளாண்
அறிவியல், ரசாயன அறிவியல், பொறியியல் மற்றும்
தொழில்நுட்ப அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணித அறிவியல், உயிர் அறிவியல், மருத்துவ அறிவியல், உடற்கல்வி அறிவியல், சமூக அறிவியல், கால்நடை அறிவியல், மனை இயல், ஆகியத் துறைகளில், விருது
வழங்கப்படுகிறது.
இத்துறைகளில், சாதனை புரிந்துள்ள, தமிழகத்தை சேர்ந்த, 40 வயதிற்குட்பட்ட
பெண்கள், இளம்பெண் விஞ்ஞானி
விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு
விண்ணப்பிக்கலாம். விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, ரொக்கப் பரிசு
வழங்கப்படும்.
விண்ணப்பிக்க
விரும்புவோர், scicity@dataone.in/sciencecityhemaa@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு, டிசம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 24454054, 24454034, ஆகிய டெலிபோன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment