Friday, 6 December 2013

கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கொங்கு நாட்டு படைப்பாளர்களையும், அவர்களின் படைப்புகளையும் போற்றும் வண்ணம் இந்தத் திறனாய்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. 

கொங்கு நாட்டின் தனித்தன்மையை படைப்புகளில் கொண்டு வந்த ஆர். சண்முக சுந்தரம், பெரியசாமித் தூரன், இரா.வடிவேலன், கு.சின்னப்பாரதி, ப.க.பொன்னுசாமி, சி.ஆர்.ரவீந்தரன், க.ரத்தினம், சிற்பி.பாலசுப்பிரமணியம், சுப்ரபாரதிமணியன், மா.நடராசன், சூர்யகாந்தன், பெருமாள் முருகன், பட்சி, க.சீ.சிவக்குமார், பழமன் ஆகியோரது படைப்புகள். முறையே சிற்பி.பாலசுப்பிரமணியம், சொ.சேதுபது, கு.மகுடேஸ்வரன், இரா.காமராசு, திருப்பூர் கிருஷ்ணன், கி.மணிகண்டன், மா.நடராசன், க.பஞ்சாங்கம், ப.ஆனந்தகுமார், மு.மதியழகன், நீ.குப்புச்சாமி, சு.வேணுகோபால், நா.கு.பொன்னுசாமி, ஜெ. மஞ்சுளாதேவி, க.அன்பழகன் ஆகியோரால் திறனாய்வு செய்யப்படுகிறது.

நாள்: டிசம்பர் 7
இடம்: என்.ஜி.பி கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை

No comments:

Post a Comment