கோவை, பீளமேடு, சிட்ரா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான
நிலையத்திலிருந்து ஷார்ஜா-(ஏர் அரேபியா), டில்லி, கோழிக்கோடு, மும்பை- (ஏர் இந்தியா), புவனேஸ்வர், சென்னை, டில்லி, மும்பை- (இண்டிகோ), அகமதாபாத், பெங்களூரு, சென்னை, @கால்கட்டா, மும்பை- (ஜெட்
ஏர்வேஸ்), சிங்கப்பூர்-(சில்க்
ஏர்), அகமதாபாத், சென்னை, டில்லி, ஐதராபாத்-(ஸ்பைஸ்
ஜெட்) உள்ளிட்ட பகுதிகளுக்கு விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில்
இரவு நேரங்களில் மட்டுமே விமான சர்வீஸ் உள்ளது.
ஷார்ஜாவுக்கு
திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்
பகல், இரவு நேரங்களில்
விமான சர்வீஸ் உள்ளது. "இரவு நேரங்களில் விமானங்களை இயக்க வேண்டும்' என, பயணிகள் தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஷார்ஜாவுக்கு இரவு நேரங்களில் மட்டுமே, விமான சர்வீஸ்
வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment