Showing posts with label 21-10-2013. Show all posts
Showing posts with label 21-10-2013. Show all posts

Monday, 21 October 2013

Damodar arti


ISKCON, Coimbatore

Programme

ISKCON, Coimbatore is conducting ‘Damodar arti’ programme.

Date: Oct 18 to Nov 17, 2013
Time: 6.45 a.m. to 8 p.m.

Venue: Sri Jagannath Mandir , Near Codissia, Coimbatore.

Wednesday, 16 October 2013

மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்

மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்: இணையதளத்தில் இனி விண்ணப்பிக்கலாம்

மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஸ்போர்ட் மையங்களில், வரும், 21ம் தேதி முதல், விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படுகிறது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், நாட்டின் பாதுகாப்புக் கருதி பாஸ்போர்ட் வழங்குதில், புதிய தொழில் நுட்பங்களை அமல்படுத்தியுள்ளது. இதற்காக, பாஸ்போர்ட் சேவகேந்திரா மையங்களை, ஆங்காங்கே துவங்கியது.


அதில், தமிழகத்தில், சென்னை மண்டலத்தில் சாலிகிராமம், தாம்பரம், அமைந்தக்கரை; மதுரை மண்டலத்தில், மதுரை, திருநெல்வேலி; திருச்சி மண்டலத்தில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், பாஸ்போர்ட் சேவகேந்திரா துவங்கப்பட்டுள்ளது. இங்கு, 'ஆன்-லைன்' வசதி மற்றும், 'பயோ மெட்ரிக்' பதிவு செய்யும் வசதி உள்ளது.

அதையொட்டி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில், புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் இயங்கி வந்த பாஸ்போர்ட் மையங்களில், விண்ணப்பம் வாங்குவதை, வரும் 21ம் தேதியோடு நிறுத்திக் கொள்ளுமாறும், அதன்பிறகு, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் விண்ணப்பங்களை மட்டும் வாங்கி, மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன், உத்தரவிட்டுள்ளார். இதனால், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் எடுக்க, இனி, சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவகேந்திராவிற்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


Wednesday, 9 October 2013

தொழில் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்(சிட்ரா)

தொழில் பயிற்சி

கோவையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்(சிட்ரா) சார்பில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கான வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

நாள்: 2013, அக். 21 முதல் நவ., 20 வரை.

பயிற்சி வகுப்புகள்:

      1. கல்சர், ஏர்ஜெட்,ரேப்பியர் தறிகளில் பிட்டர் பயிற்சி -  ஒரு மாதம்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெற தவறியவர்கள். 
வயது வரம்பு: 18 வயதுக்கு மேல், 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


2. நாடா இல்லா தறிகளில் வீவர் பயிற்சி - ஒரு மாதம்.

கல்வித் தகுதி: ஆறாம் வகுப்பு.
வயது வரம்பு: 18 வயதுக்கு மேல், 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இவ்விரு பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
நாள்: அக். 14 & 15, 2013
இடம்: சிட்ரா வளாகம், அவிநாசி ரோடு,  கோவை.

கல்வி தகுதி சான்றிதழ், ஜாதி, வருமான சான்றிதழ்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான போட்டோ, ஐந்து ரூபாய்க்கு சுயமுகவரி எழுதிய தபால்உறை உள்ளிட்டவற்றை நேர்காணலில் பங்கேற்போர் கொண்டிருத்தல் வேண்டும். அசல் மற்றும் நகல் எடுத்து வர வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் தலா 400 ரூபாய் வீதம் பயிற்சிகால உதவித் தொகை வழங்கப்படும். முடிவில், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.


மேலும் விபரங்களுக்கு, 0422-257 4367,257 4368, 257 4369 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




Friday, 4 October 2013

விசைத்தறி பணி மையத்தில் பயிற்சி


வீவர், பிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, சிட்ரா விசைத்தறி பணி மையம் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ், சோமனூரில் இயங்கும் சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் தொழில்நுட்ப பயிற்சிகள் அக்., 21ல் துவங்குகின்றன. 

சிறுபான்மை இனத்தவரல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்த பத்தாம் வகுப்பு தேறியவர்கள், தவறியவர்கள், சுல்சர் தறியில் நெசவு மற்றும் பிட்டர் பயிற்சியில் பங்கேற்கலாம். 
பயிற்சிக்கால உதவித்தொகையாக ரூ.400 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் அக்., 14 மற்றும் 15ம்தேதிகளில் நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம். மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் 0421-2333158 என்ற எண்ணில் சோமனூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.