Showing posts with label Diwali Special Train schedule. Show all posts
Showing posts with label Diwali Special Train schedule. Show all posts

Wednesday, 23 October 2013

தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு நாளை தொடக்கம்

தீபாவளியையொட்டி, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது.


சிறப்பு ரயில்கள் விவரம்:

மதுரை - சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06748) மதுரையில் இருந்து வரும் 31-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை வந்து சேரும்.

சென்னை எழும்பூர் - நெல்லை (06747) சிறப்பு ரயில் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 1-ம் தேதி காலை 10.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 2.30 மணிக்கு நெல்லை போய்ச் சேரும்.

நெல்லை - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் (06749) சிறப்பு ரயில் (திருச்சி, விருத்தாசலம் வழியாக) நெல்லையில் இருந்து நவம்பர் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்து சேரும்.

கோவை - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06626) கோவையில் இருந்து நவம்பர் 1-ந் தேதி மற்றும் 4-ந் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 8.30 மணிக்கு சென்னை வந்துசேரும்.

சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (06625) சென்னையில் இருந்து நவம்பர் 1-ம் தேதி பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு அதேநாளில் இரவு 9 மணிக்கு கோவை போய்ச்சேரும்.