Showing posts with label 17-10-2013. Show all posts
Showing posts with label 17-10-2013. Show all posts

Thursday, 17 October 2013

கோவையிலிருந்து தொலைதூர ரயில்கள் ‘புல்’

வரும் நவ.,2ம் தேதி தீபாவளி பண்டிகையால், கோவையிலிருந்து சென்னை, நெல்லை உள்ளிட்ட தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்களில் வரும் 31, நவ.,1ம் தேதிகளுக்கான இருக்கை முன்பதிவு முடிந்துள்ளது.

இதில் முன்பதிவு செய்து காத்திருப்போரின் பட்டியல்:

நாள்: அக். 31, 2013

சேரன் எக்ஸ்பிரஸ் (கோவை - சென்னை) – 165 பேர்
நீலகிரி எக்ஸ்பிரஸ் (மேட்டுப்பாளையம் – கோவை – சென்னை) – 159 பேர்
கோவை எக்ஸ்பிரஸ் (கோவை – சென்னை) – 93 பேர்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் – 297 பேர்
மன்னார்குடி எக்ஸ்பிரஸ் – 243 பேர்
வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் – 38 பேர்
கன்னியாகுமரி – மும்பை எக்ஸ்பிரஸ் – 125 பேர்
ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் – 167 பேர்
திருவனந்தபுரம்-கோவை-டில்லி எக்ஸ்பிரஸ் – 185 பேர்

நாள்: நவ. 1, 2013

சேரன் எக்ஸ்பிரஸ் – 50 பேர்
நீலகிரி எக்ஸ்பிரஸ் – 56 பேர்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் – 208 பேர்
மன்னார்குடி எக்ஸ்பிரஸ் – 79 பேர்
வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் – 100 பேர்
கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் – 125 பேர்
ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் – 200 பேர்
திருவனந்தபுரம்-டில்லி எக்ஸ்பிரஸ் – 200 பேர்



வாக்காளர் பட்டியல் ஆன்-லைன் விண்ணப்பம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி, இம்மாதம் முதல் தேதி துவக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி, 18 வயது பூர்த்தியானவர்களை தகுதியுடையவராகக் கொண்டு, வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் இம்மாதம், 30ம் தேதி வரை நடைபெறும்.

பொதுமக்கள் வசதிக்காக, விடுமுறை நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை), அனைத்து ஓட்டு சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வழக்கம் போல், உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், லேப்டாப் வசதி இல்லாதோர், இணையதள மையங்களுக்கு சென்று, ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதள மையங்களுக்கு, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது.



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, ஆன்-லைனில் விண்ணப்பிப்போர், தங்கள் விண்ணப்பத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்ற விவரத்தையும், ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பித்ததை சரிபார்க்க, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதையும், ஆன்-லைனில் அறிந்து கொள்ளலாம்.

தீபாவளிக்கு பயணிகள் சொந்த ஊர் செல்ல 8000 பஸ்கள்

தீபாவளிக்கு பயணிகள் சொந்த ஊர் செல்ல 8000 பஸ்கள் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முன்பதிவுக்கு 25 மையங்களையும் அமைத்துள்ளது

தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து, 8,350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. 


தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும், சிறப்பு பேருந்துகளை இயக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.


அனைத்து மாவட்ட தலைநகர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, இம்மாதம், 29ம் தேதி - 700; 30ம் தேதி - 1,000; 31ம் தேதி - 1,200; நவ., 1ம் தேதி - 1,400 என, மொத்தம் 4,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.மேலும், சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 29ம் தேதி - 634; 30ம் தேதி - 950; 31ம் தேதி - 1,256;நவ., 1ம் தேதி - 1,210 என, மொத்தம் 4,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

இதே போல், தீபாவளி பண்டிகை முடிந்த பின், பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் வகையில், இதே அளவிலான பேருந்துகள், நவ., 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை இயக்கப்படும்.


மேலும், 300 கி.மீ., தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பேருந்துகளுக்கு, www.tnstc.in என்ற இணையதளம் மூலம், முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 25 சிறப்பு முன்பதிவு நிலையங்கள் செயல்படுத்தவும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இயக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தீபாவளியை ஒட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகத்தின், 044 - 24794709 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். 

Wednesday, 16 October 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (17-10-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.) 

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

மேற்கு மண்டலம்

வார்டு 5: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, கவுண்டம்பாளையம்.
வார்டு 6: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, இடையர்பாளையம்.
வார்டு7: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, இடையர்பாளையம்.
வார்டு8: அரசு மேல்நிலைப் பள்ளி, கவுண்டம்பாளையம்.
வார்டு9: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம்.

வடக்கு மண்டலம்

வார்டு 27: ராமாநத்த அடிகளார் மேல்நிலைப்பள்ளி, சின்னவேடம்பட்டி.
வார்டு 28: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, சின்னமேட்டுப்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சரவணம்பட்டி.
வார்டு 29: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சிவானந்தபுரம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, ஜனதா நகர், சரவணம்பட்டி.
வார்டு 30: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, எல்.ஜி.பி., நகர், சரவணம்பட்டி.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, ஷாஜகான் நகர், சரவணம்பட்டி.
வார்டு 31: அரசு மேல்நிலைப் பள்ளி, சரவணம்பட்டி.
வார்டு 42: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, உடையாம்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சின்னவேடம்பட்டி.