Tuesday, 1 October 2013

மாணவர்களுக்கு பரிசுப் போட்டி

மனிதநேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவு பூங்கா அமைப்பு, 8ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினவிழாவை, சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாள் விழாவாக, காந்தி பிறந்தநாளை கொண்டாடுகிறது.

இதற்கான விழா கோவை, வடவள்ளி, சின்மயா வித்யாலயா வளாகத்தில், அக் 2 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக, அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு, மகாத்மா, வன்முறை வேண்டாம், முதியோரை மதிப்போம் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளையும், வினாவிடை போட்டிகளையும் நடத்துகிறது.


விபரங்களுக்கு, பொதுச் செயலாளர், மனிதநேயப்பேரவை, 10, யமுனா வீதி, கியூரியோ கார்டன், கோவை – 641046 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment