Wednesday 5 June 2013

கோவை குற்றாலம் இன்று திறப்பு




சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில், மழை துவங்கியதால், கோவை குற்றால அருவி இன்று திறக்கப்படுகிறது.



கோவையிலிருந்து, 40 கி.மீ., தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்குள்ள, குஞ்சராடி மலைமுகட்டில், 1,800 மீ., அடி உயரத்திலிருந்து, பொங்கு நுரையுடன், விழும் தண்ணீரில் குளிப்பதற்காக, சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பொய்த்துபோனதால், அருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றது. இதையடுத்து, மார்ச் 6ம் தேதி அருவி மூடப்பட்டது. தற்போது, சிறுவாணி உட்பட, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், கோவை குற்றால அருவிக்கு, நீர்வரத்து உள்ளது. மூன்று மாத இடைவெளிக்கு பின், கோவை குற்றால அருவி, இன்று திறக்கப்படுகிறது. "வார நாட்களில் திங்கள் கிழமை தவிர, மீதமுள்ள ஆறு நாட்களும், கோவை குற்றால அருவி திறந்திருக்கும்' என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment