Thursday 28 February 2013

கோவையில் ராஜூ முருகன்!


நாளை (மார்ச்-1) ஜி.ஆர்.டி கல்லூரியில் நிகழும் அவ்தார் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வட்டியும் முதலும்’ புகழ் ராஜூ முருகன் உரையாற்ற இருக்கிறார். மேலதிக விபரங்களுக்கு:http://avtarfest.com/2013/index.html

கோவை ஷாப்பிங் உணவுத் திருவிழா!


கோவையில் ஞாநி!






வரும் ஞாயிறன்று (மார்ச்-3) காலை பத்து மணிக்கு ஆர்.எஸ் புரம் புரந்தரதாசர் கலையரங்கில் சங்கமம் நடத்தும் சாதிய எதிர்ப்புக் கருத்தரங்கில் ஓ பக்கங்கள் ஞாநி பேசுகிறார்.
மேலதிக விபரங்களுக்கு: செல்வகுமார் 98421 09978.

நீர்நாடி - பேரூர் படித்துறையில்






உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி ‘நீர்நாடி’. மார்ச் 22-ஆம் தேதி பேரூர் நொய்யல் நதிக்கரை படித்துறையில் காலை 8:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

குழந்தைகளின் நடனத் திருவிழா





Footloose நடனப்பள்ளி வழங்கும் ‘குழந்தைகளின் நடனத் திருவிழா’ வரும் மார்ச்2-ஆம் தேதி (சனிக்கிழமை) கோவை மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

வேலைவாய்ப்புத் திருவிழா!


டாக்டர். ராஜேந்திரா கே. பச்சோரி பேசுகிறார்!


பசும்புலரி - சூழலியல் அமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற சூழலியலாளர் டாக்டர். ராஜேந்திரா கே. பச்சோரி உரையாற்றுகிறார். கொடீசியா வளாகத்தில் வரும் மார்ச் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Pasumpulari - Monthly meet on March 11 at Codissia Trade Fare Center (COINTEC), Coimbatore
Presided by Nobel laureate Dr.Rajendra K.Pachauri

Wednesday 27 February 2013

வேளாண் கண்காட்சி


புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மார்ச் 1 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: http://puthiyathalaimurai.tv/events/2013/agri-fest/fpc-events.htm

ரைஸ் & கறி - உணவுத் திருவிழா 2013



’ரைஸ் & கறி - உணவுத் திருவிழா 2013’ ஏஜேகே கல்லூரி உண்வு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை மாணவர்கள் ஒருங்கிணைக்கும் உணவுத் திருவிழா.
நாள்: 03-03-02013
நேரம்: மாலை 6:30 மணி
இடம்: மீனாட்சி ஹால் (கே.எஃப்.சி. சிக்கன் அருகே) நவ இந்தியா
தொடர்புக்கு: 9843604004

Monday 25 February 2013

WOLF NIGHT


ERISTOFF - BRING ON THE NIGHT இசையிரவில் டிஜே ஆரோன் வழங்கும் நியு ஏஜ் இசையினைக் கேட்டு மகிழுங்கள். மார்ச் 2ம் தேதி சனிக்கிழமை இரவு ஹோட்டல் ரெஸிடென்சியில். தொடர்புக்கு: 9894163728

படம் எடுங்கள்... பரிசினை வெல்லுங்கள்!

கோவை வாசிகளுக்கென்றே ஓர் எக்ஸ்க்ளூசிவ் புகைப்பட போட்டி

'Battle of the Bands'

சசி க்ரியேட்டிவ் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் நடத்தும் கலை விழா ‘கல்பனா-13’ மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் சிறப்பம்சமாக தமிழகத்தின் புகழ்மிக்க இசைக்குழுக்களான  Crossroads, Enigmatic, Devolution, Fortified Destruction முதலிய பேண்டுகள் கலந்துகொள்ளும்  'Battle of the Bands' இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மஹா சிவராத்திரி விழா


ஈஷா மஹாசிவராத்திரி விழா மார்ச் 10ம் தேதி மாலை 6:00 மணிக்குத் துவங்குகிறது.

Sunday 24 February 2013

மேலாண்மை தின விழா

கோயம்புத்தூர் மானேஜ்மெண்ட் அசோஷியேசனின் ஆண்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை (பிப்-25 திங்கள்) 6:30 மணியளவில் ஹோட்டல் ரெஸிடென்சியில் நடைபெற இருக்கிறது. IRIZAR-TVS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. தீபக் தாகூர் கலந்துகொள்கிறார். 

International Marketing in Asia Pacific Issues and Challenges (ICIM) - 2013


Friday 22 February 2013

தமிழ் இணையம் - வளர்ச்சியும் வாய்ப்பும்


காணாமல் போன காணுயிர்கள்!




அருகி வரும் பறவையினங்கள் குறித்த சிறப்புரை. சலீம் அலி பறவைகள் ஆய்வகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரும் புகழ்மிக்க பறவை ஆராய்ச்சியாளருமான டாக்டர் ராஜா ஜெயபால் உரையாற்றுகிறார்.

இடம்: ஹோட்டல் தமிழ்நாடு, காந்திபுரம்

நாள்: பிப்ரவரி 24 - ஞாயிறு

ஏற்பாடு: ஓசை

தொடர்புக்கு: 0422-4372457

அன்றாட வாழ்வில் அறிவியல்








Buzz கிளப் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்வு 'Science in our life' அவிநாசி சாலையிலுள்ள தாமோதர் சென்டரில் பிப்-23 (சனி) மாலை 4:30 மணியளவில் நடைபெற இருக்கிறது. சுவையான அறிவியல் விளையாட்டுக்கள், அறிவியல் பரிசோதனைகள், கலந்துரையாடல்கள் நிகழ இருக்கின்றன. மாணவர்கள், குழந்தைகள் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வு. மேலதிக விபரங்களுக்கு: 9894040227

Saturday 16 February 2013

YAKSHA - 2013 நிகழ்ச்சி நிரல்


ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார்


கோயம்புத்தூ ம்யூசிக் அகாடமி வழங்கும் கர்நாடக சங்கீத கச்சேரியில் ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார். பிப்ரவரி 24ம் தேதி கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியத்தில் மாலை 6:30 மணிக்கு கச்சேரி துவங்கும்.

Secret Race - கல்லூரி மாணவர்களுக்கான போட்டி

25வது ஆண்டு விழாவினையொட்டி சிகரகம் அறக்கட்டளை கல்லூரி மாணவர்களுக்கான ‘Secret Race' எனும் போட்டியினை நடத்த இருக்கிறது. போட்டியாளர்கள் ஐந்து கட்ட சவால்களைத் தாண்டி வெற்றி இலக்கினை அடையும்படி நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைமைப் பண்பு, நிர்வாகத்திறன், குழுமனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் போட்டி இருக்கும். அவிநாசி சாலையில் உள்ள மீனாட்சி அரங்கில் மார்ச் 17 முதல் மார்ச் 24 வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

மாதவன் நாயன் பேசுகிறார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் 'Technological Challenges for National Development' எனும் தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் உரையாற்ற இருக்கிறார்.
நாள்: பிப்ரவரி18-ம்தேதி (திங்கள் கிழமை)

Friday 15 February 2013

WATER நாட்கம்


தி மெட்ராஸ் பிளேயர்ஸ் நாடகக்குழு ‘Water’ எனும் நாடகத்தினை இன்று (பிப்ரவரி-16) மாலை 6:30 மணியளவில் ஜி.ஆர்.டி ஆடிட்டோரியத்தில் நிகழ்த்துகிறது. கோமல் ஸ்வாமிநாதனின் புகழ்பெற்ற ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தின் ஆங்கில வடிவம் இது. மேலதிக விபரங்களுக்கு: 99945-00046

இதயத்தின் தாகம்


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘இதயத்தின் தாகம்’ மன அமைதிக்கான பஜன் மற்றும் சத்சங்கம். பிப்ரவரி-17ம் தேதி ஞாயிறு கிக்கானி பள்ளி வளாகத்திலுள்ள சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியத்தில் மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.

லிட்டில் ஜீனியஸ் அறிவியல் கண்காட்சி 2013


டோஸ்ட் மாஸ்டர் கழகத்தின் விசிட்டர்ஸ் டே!

டோஸ்ட் மாஸ்டர் கழகத்தின் விசிட்டர்ஸ் டே வரும் பிப்ரவரி-16ம்தேதி (சனிக்கிழமை) மாலை 5:45க்கு பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

மேலதிக விபரங்களுக்கு: திரு.அன்மோல் -  9543952233

Thursday 14 February 2013

MSME EXPO-2013

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக் கழகம், கோவை மாவட்ட சிறிய இண்டஸ்ட்ரீஸ் அமைப்பு இணைந்து நடத்தும் MSME-2013 கண்காட்சி கொடீசியா வளாகத்தில் பிப்ரவரி20 மற்றும் 21 ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளது.

ஜிசிடி கல்லுரியில் TEDxGCT


கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி இளங்கலை மாணவர்களும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்யும் TEDxGCT நிகழ்ச்சி. Amagi Media-ன் நிறுவனர் பாஸ்கர் சுப்ரமண்யம், ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இடம்: ராஜலெக்‌ஷ்மி அரங்கம், ஜிசிடி கல்லூரி வளாகம்
நாள்: பிப்ரவரி - 16
நேரம்: 2:30 மதியம்
தொடர்பு: ரம்யா - 94877-24669

செம்பையில் கே.ஜே.ஜேசுதாஸ்!


பாலக்காட்டுக்கு அருகேயுள்ள சிற்றூர் செம்பை. இங்குள்ள பார்த்தசாரதி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசி சங்கீத உற்சவம் நடைபெறும். செம்பை கர்நாடக சங்கீத ஜாம்பவான் வைத்தியநாத பாகவதரின் சொந்த ஊர். அவர் பாடகர் ஜேசுதாஸின் குருநாதர்.

ஒவ்வொரு ஆண்டு சங்கீத உற்சவத்தின்போதும் கே.ஜே.ஜேசுதாஸின் கச்சேரி செம்பையில் நிகழ்வது வழக்கம். அது கேஜேஜேயின் வழக்கமான கச்சேரிகளிலிருந்து மாறுபட்டதும் தனித்துவமானதும் ஆகும். ஒரு மாணவன் எந்நாளும் மனதில் வைத்து பூஜிக்கும் தன் குருவிற்கு மானசீகமாக  கலையினால் மரியாதை செய்வதைப் போல இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இந்த அபாரமான கச்சேரியினைக் கேட்க ரசிகர்கள் செம்பையில் கூடுவதுண்டு. வரும் பிப்ரவரி-17ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

கோவையிலிருந்து கூப்பிடு தூரம் என்பதால் கோயம்புத்தூர்க்காரர்கள் இந்த இசை மழையை ரசிக்கலாம்

லைஃப் ஸ்டைல் எக்ஸ்போ - 2013


வீட்டு உபயோகப்பொருட்களின் சர்வதேச கண்காட்சி ‘லைஃப் ஸ்டைல் எக்ஸ்போ - 2013’ கொடீசியா கண்காட்சி வளாகத்தில் இன்று துவங்கி பிப்ரவரி-17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: 9677196677

'INTERNATIONAL OUTREACH - 2013'

கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா, எட்டின்பர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் 'INTERNATIONAL OUTREACH - 2013' வரும் பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 23ம்தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: 9489831307


வணக்கம் கோயம்புத்தூர்!

வணக்கம்!

சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களைப் போலவே ‘ஹேப்பனிங்’ சிட்டியாக மாறிவிட்டது நமது கோவை.  தினம் தினம் கோவையின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது நிகழ்ச்சிகள் உள்ளூர் அமைப்புகளாலும், நிறுவனங்களாலும் ஒருங்கிணைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இலக்கியம், ஆன்மிகம், நடனம், இசை, வர்த்தகம், சுயமுன்னேற்றம், நாடகம், கண்காட்சி, வினாடி வினா, பயிலரங்கங்கள் என நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இவை குறித்த அறிவிப்புகளை, இன்னபிற விபரங்களை எளிய தமிழில் அனைவரும் அறிந்துகொள்ள உதவும் நோக்கிலே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

முகநூலில் http://www.facebook.com/KovaiHappening என்ற முகவரியிலும்
ட்வீட்டரில் https://twitter.com/KovaiHappenings என்ற முகவரியிலும் எங்களை நீங்கள் பின் தொடரலாம்.

நன்றி.