Monday 10 June 2013

அம்மா உணவகத்தில் ‘இ-டோக்கன்’ முறை

கோவை மாநகராட்சியில் மொத்தம் 10 இடங்களில் ‘அம்மா உணவகம்’ துவங்கப்பட்டுள்ளது. இங்கு இட்லி ஒன்று ஒரு ருபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ருபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த உணவகங்களில் ரசீது முறைக்கு மாற்றாக ‘இ-டோக்கன்’ முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இட்லிக்கு வெள்ளை, சாம்பார் சாதத்திற்கு பச்சை, தயிர் சாதத்திற்கு வெள்ளை நிறத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும். உணவு வேண்டுவோர் பணம் செலுத்தியதும் ‘ஸ்மார்ட் கார்டு’ இயந்திரத்தில் காண்பித்து, உணவு எண்ணிக்கையை குறிப்பிட்டு, அந்த கார்டை கையில் கொடுத்துவிடுவார்.  உணவு வழங்குபவர் அந்த கார்டை பெற்று, இயந்திரத்தில் காண்பித்ததும், எவ்வளவு உணவு என்பது தெரிந்துவிடும்.


இந்த முறையால் ஒவ்வொரு உணவகத்திலும் விற்பனை விபரத்தை ‘ஆன்–லைன்’ மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment