Thursday 27 June 2013

கட்டடக் கலை, கட்டுமான பொருட்கள் கண்காட்சி "கன்ஸ்ட்ரக்டிவ் 2013"

கண்காட்சியில், கட்டடங்களுக்கு தேவையான உள், வெளி அலங்கார பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், கட்டடங்கள் கட்டுவதற்கான இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை 100க்கும் அதிகமான அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வங்கிகள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெற உள்ளன. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தேவையான நவீன உள், வெளி அலங்கார பொருட்கள், கட்டுமானத்துக்கு தேவையான மென்பொருட்கள், டைல்ஸ்கள், மாடுலர் கிச்சன்கள் என, அனைத்து விதமான தயாரிப்புகளும் இடம்பெறுகின்றன. கண்காட்சியுடன் எலக்ட்ரிக்கல் எக்ஸ்போ 2013, ரூபோ 2013 ஆகிய கண்காட்சிகளும் இடம் பெறுகின்றன. வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான அலங்கார விளக்குகளுக்கான ஸ்டால்களும் இடம் பெற உள்ளன.

நாள்: ஜூன் 28-30 வரை, 2013
நேரம்: காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

இடம்: பத்மாவதி கலாச்சார மையம், அவிநாசி ரோடு, கோவை.

No comments:

Post a Comment