Wednesday, 4 September 2013

தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்

எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு நிலையம், ஐலண்ட் அறக்கட்டளை

தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்

கோவை ’எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு நிலையம்’ மற்றும் கோத்தகிரி ’ஐலண்ட் அறக்கட்டளை’, சார்பில், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.

காலை 9.30 மணிக்கு கோத்தகிரி ஐலண்ட் அறக்கட்டளையில் நடக்கும் முகாம் மூலம், தகுதி வாய்ந்த நபர்கள் சிறு தொழில் நிறுவங்களை துவக்குவதற்கான ஆறு வாரகால தொழில் முனைவோர் பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.

இதில், எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது மேல் தகுதியுடன், 18-45 வயதிற்குள் உள்ள, சிறு தொழில் நிறுவனம் துவங்கும் திட்டம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

சிறந்த முறையில் தொழில் முனைவோர் பயிற்சியை முடித்து தொழில் துவங்குபவர்களுக்கு, தகுதியுள்ள திட்டங்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் கடனுதவிபெற பரிந்துரைக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் வரும் 5ம் தேதிக்கு முன், உதவி இயக்குனர், எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு நிலையம், 386, பட்டேல் ரோடு, ராம்நகர், கோவை – 641 009 என்ற முகவரியிலோ அல்லது 0422-2233956, 2230426, 94861 14285 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.








No comments:

Post a Comment