Tuesday, 24 September 2013

விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு கோவையில் சிறப்பு பயிற்சி


ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள இந்திய விமானப்படை ஆட்சேர்ப்புக்கு, கோவையில் நாளை (25ம் தேதி) சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இந்திய விமானப்படையில் 10வது குரூப் பிரிவில் ஆட்சேர்ப்பு முகாம், அக்., 18 முதல் 22 வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கிறது. 17 வயது முதல் 21 வயதுக்குள் உள்ள ஆண்கள், இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அல்லது பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாண்டு கால டிப்ளமோபடிப்பில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்குரிய வழிவகைகள் பற்றி "டிப்ஸ்' கொடுக்க, நாளை காலை 9:00 மணிக்கு சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment