Saturday, 21 September 2013

கைத்தறி கண்காட்சி

இந்தியாவில் சேலை ரகங்களில், கைத்தறிக்கு தனி பாரம்பரியம் உள்ளது. தற்போது கைத்தறியில் பல விதமான வண்ணங்கள், டிசைன்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. காஞ்சீவரம், தர்மாவரம், போச்சம்பள்ளி, பனாரஸ், ஜம்தானி, ஜமாவார் உள்ளிட்ட பாரம்பரிய பட்டு வகைகள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உ.பி., மற்றும் குஜராத் மாநிலங்களில் புகழ்பெற்றவை. கைத்தறி நெசவு பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதுடன் மிகப்பெரிய குடிசைத் தொழிலாக விளங்குகிறது. தற்போது இத்தொழிலை மேற்கொண்டு வருவோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும், வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது படைப்புகள் நேரடியாக சென்றடையும் வகையிலும், இந்த கைத்தறி கண்காட்சி துவங்கியுள்ளது.


நாள்: செப் 24, 2013 வரை.
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம்: சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு, கோவை.




No comments:

Post a Comment