கோவை மாவட்டத்தில் அக்., முதல் தேதி வரைவு
வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்படுகிறது.
வரும் அக்.,1 முதல் அந்த மாதம் இறுதி வரை வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யலாம். இதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள்
மற்றும் தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த
ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 01.01.2014
அன்று 18 வயது நிறைவடைபவர்கள், வாக்காளர் பட்டியில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே இருந்த
சட்டசபை தொகுதியிலிருந்து வேறு சட்டசபை தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் ஆகியோர்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள்.
வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 ம், நீக்கத்துக்கு படிவம் 7 ம், பெயர் மற்றும் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ம், குறிப்பிட்ட சட்டசபை தொகுதியிலிருந்து, வேறு பகுதிக்கு
மாற்றமாகியிருந்தால் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ யை பயன்படுத்த வேண்டும். அக்.,6, 20, 27 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப்பதிவு
மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 31.10.2013 வரை விண்ணப்பங்கள்
பெற்று, பரிசீலனை செய்து 06.01.2014 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்படும்.
No comments:
Post a Comment