Monday, 16 September 2013

உணவு பகுப்பாய்தல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

உணவு பகுப்பாய்தல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் துரித முறையில் உணவு பகுப்பாய்தல் பயிற்சி வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது.

இதில், நுண்ணுயிர் தொற்று, பூசண நச்சு வகை, மரபணு மாற்றப்பட்ட உயிர்மப் பொருள், பொறிக்கப்பட்ட கொழுப்பு சிதைமாற்றம், நுண்ணுயிர் எதிரிப்பொருள், உணவுப் பொருட்களில் ஒவ்வாமை ஏற்படுத்தும் பாலின் படிவங்கள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள், 1000 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பெயரை பதிவு செய்ய இயலாதவர்கள் பயிற்சி கட்டணத் தொகையை வரைஓலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில், எடுத்து அனுப்ப வேண்டும். வரும் 18ம் தேதி பதிவு செய்ய இறுதி நாள்.


மேலும் விவரங்களுக்கு, 0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment