Monday, 9 September 2013

கோவை - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகம்

கோவையிலிருந்து திருச்சி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது; கோவை - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் சேவை, மேலும் ஒரு நாள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கோவையிலிருந்து வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22616) இயக்கப்படுகிறது. இதேபோன்று திருப்பதியிலிருந்து வாரந்தோறும் திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாட்கள் கோவைக்கு ரயில் (வண்டி எண்: 22615) இயக்கப்படுகிறது.

வாரந்தோறும் மூன்று நாட்கள் இயக்கப்பட்ட கோவை - திருப்பதி இடையிலான ரயில் சேவை, தற்போது ஒரு நாள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவை - திருப்பதி இடையே வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுதலாக ரயில் சேவை வழங்கப்படுகிறது. இச்சேவை இரு மார்க்கங்களிலில் இருந்தும் வரும், 12ம் தேதி முதல் துவங்குகிறது. பயண நேரம், நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

இதேபோன்று, கோவை - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்டுகிறது. இச்சேவை வரும், 17ம் தேதி கோவையில் துவங்குகிறது.கோவையிலிருந்து வரும், 17ம் தேதி இரவு, 7:45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16618), திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக மறுநாள் காலை, 06.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

இதேபோன்று, 18ம் தேதி இரவு, 07.00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 16617), அதே வழித்தடத்தில் மறுநாள் காலை 6:40 மணிக்கு கோவை வந்தடைகிறது.இந்த ரயில் சேவை, வாரந்தோறும் கோவையிலிருந்து செவ்வாய் கிழமையும், ராமேஸ்வரத்திலிருந்து புதன் கிழமையும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவுகள் துவங்கி விட்டன. 

No comments:

Post a Comment