Tuesday, 12 March 2013

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா!



பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பேரூர் கொங்குநாட்டு வைப்புத்தலங்களில் பிரசித்த பெற்ற சிவன் தலமாகும். இங்கு ஆண்டுதோறும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கிறது. விழா, வரும் 17ம் தேதி காலை 7.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு 8.00 மணிக்கு மலர்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்களுக்கு, காலை 9.00 மணிக்கு வேள்விபூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.
18ம் தேதி இரவு சந்திரபிரபை, சூர்யபிரபை திருவீதி உலா, 19ம் தேதி இரவு பூதவாகனம், சிம்மவாகனம், 20ம் தேதி இரவு மலர்ரதம், காமதேனுவாகனம், 21ம் தேதி இரவு 9.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபவாகன காட்சி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் காட்சியும், 22ம் தேதி இரவு 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை சேவையும் நடக்கிறது.
வரும் 23ம் தேதி மாலை 3.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 24ம் தேதி இரவு 8.00 மணிக்கு வேடுபரி உற்வசம், குதிரைவாகனம், கிளிவாகனம் திருவீதி உலா நடத்தப்பட்டு, வரும் 25ம் தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத்திருவிழா நடக்கிறது. வரும் 26ம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள், ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சனம், தரிசனக்காட்சி, மகாதீபாராதனை, திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 26ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment