Showing posts with label 17-03-2013. Show all posts
Showing posts with label 17-03-2013. Show all posts
Thursday, 14 March 2013
Wednesday, 13 March 2013
விவேகானந்தரின் சூரிய நமஸ்காரம் யோகா பயிற்சி வகுப்பு
சுவாமி விவேகானந்தரின் 150-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து நடத்தும் ‘விவேகானந்தரின் சூரிய நமஸ்காரம் யோகா பயிற்சி வகுப்பு’ வரும் மார்ச்-17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியளவில் கிக்கானி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
டாக்டர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையுரை ஆற்றுகிறார்.
அனுமதி இலவசம்!
வாருங்கள், போதையை வீழ்த்துவோம்! வரும் 17ல் கோவையில் சிறப்பு நிகழ்ச்சி
போதையில் வீழ்ந்தவர்களை மீட்பதற்கு உதவும் முக்கிய நிகழ்வு, கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் வரும் ஞாயிறன்று நடக்கவுள்ளது; குடியிலிருந்து மீள விரும்புவோரும், பிறரை மீட்க விரும்புவோரும் இதில் பங்கேற்று பயனடையலாம்.
தமிழகத்தில் குடிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கீழ்த்தட்டு மக்களிடத்தில் வெகுவேகமாகப் பரவி வரும் "டாஸ்மாக்' கலாச்சாரம், பல குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோரும், குடி உள்ளிட்ட போதை வஸ்துக்களை உட்கொண்ட நிலையிலேயே குற்றங்களைச் செய்திருப்பதும் பல வழக்குகளில் நிரூபணமாகியிருக்கிறது. பட்டப்பகலில் பள்ளிச் சீருடையில், மது மயக்கத்தில் தடுமாறும் மாணவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. மதுக்கடைகளை மூட வேண்டுமென்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், காந்தியவாதிகளும் பல விதங்களில் போராடி வந்தாலும், இப்பிரச்னையை சமூகக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு தமிழக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. வருவாய் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால், குடிப்பவர்களின் எண்ணிக்கையும், குடிப்பதன் அளவும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மது விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்கும் போட்டியில், உழைப்புக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டமும், முன்னணியில் இருப்பது வேதனைக்குரிய முரண்பாடு. இந்த மாவட்டத்தில், மாதத்துக்கு, மூன்றரை லட்சம் மது பாட்டில்களும், ஒன்றரை லட்சம் பீர் பாட்டில்களும் விற்பனையாகின்றன; மாதத்துக்கு 140 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய்க்கு கோவை "குடி'மகன்கள் குடித்துத் தீர்க்கின்றனர். இந்த தொகையில், எத்தனை பாலங்கள், எத்தனை சாலைகள் அமைக்கலாம் என்பது ஒரு புறமிருக்கட்டும்; எத்தனை குடும்பங்களுக்குப் போய்ச் சேர வேண்டிய தொகை இது?. திருமணத்துக்காக, கல்விக்காக, மூன்று வேளை உணவுக்காக வைத்திருந்த எத்தனை பணம், இந்த மது பாட்டில்களில் கரைந்தது என்பதை யாராலும் கணக்கிட முடியாது. குடிக்கு அடிமையாகி இறந்தவர்களையும், அதனால் நிலை குலைந்த குடும்பங்களையும் யாராலும் மதிப்பிடவும் முடியாது. போதையின் பாதையில் வெகுதூரம் சென்று விட்ட தமிழ்ச் சமுதாயத்தை மீட்க வேண்டிய அரசு, மவுனம் சாதிக்கிறது. அதனால், போதையில் வீழ்ந்து கிடக்கும் கணவரை, மகனை, நண்பனை மீட்க வேண்டிய பொறுப்பு, நம்மையே சார்ந்திருக்கிறது. கோவையில் அதற்கான இனிய துவக்கமாக ஞாயிறன்று நடக்கிறது நல்லதொரு நிகழ்வு.
கோவை மக்களின் இதயங்களை இனிப்பால் வென்ற "ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனம், ஞாயிற்றுக்கிழமைகளில் "ஞாயிறுதோறும் சந்திப்போம்; நல்லதே சிந்திப்போம்' என்ற தலைப்பில், ஆன்மிகம், இசை, சமூகம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில், சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமையை "போதைக்கு எதிரான ஞாயிறாக' மாற்றும் வகையில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில், "போதை-ஒரு விஞ்ஞான பார்வை' என்ற தலைப்பில் மனோதத்துவ நிபுணர் சீனிவாசனும், "போதை-மீள்வதும் மீட்பதும் நமது கடமை' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் சிவசங்கரியும் உரை நிகழ்த்துகின்றனர். கோவை புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள கிக்கானி பள்ளியில், வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்குகிறது.
போதையால் ஏற்படும் தீமைகளை, நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் விஷயத்தோடு விளக்கப்போகும் இந்நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்பது முக்கியம்; அதை விட, எப்போதும் "உற்சாகத்தில்' மிதப்போரையும் "தெளிவாய்' அழைத்து வருவதும் அவசியம்.
Tuesday, 12 March 2013
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா!
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பேரூர் கொங்குநாட்டு வைப்புத்தலங்களில் பிரசித்த பெற்ற சிவன் தலமாகும். இங்கு ஆண்டுதோறும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கிறது. விழா, வரும் 17ம் தேதி காலை 7.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு 8.00 மணிக்கு மலர்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்களுக்கு, காலை 9.00 மணிக்கு வேள்விபூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.
18ம் தேதி இரவு சந்திரபிரபை, சூர்யபிரபை திருவீதி உலா, 19ம் தேதி இரவு பூதவாகனம், சிம்மவாகனம், 20ம் தேதி இரவு மலர்ரதம், காமதேனுவாகனம், 21ம் தேதி இரவு 9.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபவாகன காட்சி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் காட்சியும், 22ம் தேதி இரவு 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை சேவையும் நடக்கிறது.
வரும் 23ம் தேதி மாலை 3.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 24ம் தேதி இரவு 8.00 மணிக்கு வேடுபரி உற்வசம், குதிரைவாகனம், கிளிவாகனம் திருவீதி உலா நடத்தப்பட்டு, வரும் 25ம் தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத்திருவிழா நடக்கிறது. வரும் 26ம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள், ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சனம், தரிசனக்காட்சி, மகாதீபாராதனை, திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 26ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Wednesday, 6 March 2013
Saturday, 16 February 2013
Secret Race - கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
25வது ஆண்டு விழாவினையொட்டி சிகரகம் அறக்கட்டளை கல்லூரி மாணவர்களுக்கான ‘Secret Race' எனும் போட்டியினை நடத்த இருக்கிறது. போட்டியாளர்கள் ஐந்து கட்ட சவால்களைத் தாண்டி வெற்றி இலக்கினை அடையும்படி நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைமைப் பண்பு, நிர்வாகத்திறன், குழுமனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் போட்டி இருக்கும். அவிநாசி சாலையில் உள்ள மீனாட்சி அரங்கில் மார்ச் 17 முதல் மார்ச் 24 வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
Subscribe to:
Posts (Atom)




