போபாலில் நவ.20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்தப்படும் தேசிய அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யும் வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள் கோவையில் நடத்தப்படுகிறது.
வயது: டிச.,31ம் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
1. கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவியர், பங்கேற்கும் விளையாட்டுப் பிரிவுக்கான நுழைவு விண்ணப்பத்தை, பிறந்த தேதி குறிப்பிட்டு, பயிலும் நிறுவனம் மூலமாக வழங்க வேண்டும்.
2. ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவுக்கும், தனித்தனியே நுழைவு விண்ணப்பம் வழங்க வேண்டும்.
3. விளையாட்டு குழுக்கள் மூலமாக, நுழைவு விண்ணப்பம் வழங்குபவர்கள், பிறந்த தேதிக்கான சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். நுழைவு விண்ணப்பங்கள், போட்டிகள் நடத்தப்படும் இடத்தில், நடத்தப்படும் நாளில் நேரில் பெற்றுக் கொள்ளப்படும்.
நாள்: நவ.11, 2013
நேரம்: காலை 9 மணி
இடம்: பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மைதானம், பீளமேடு, கோவை.
போட்டி விவரங்கள்: தடகளப் பிரிவில், 100 மீ., 100 மீ., தடை ஓட்டம், 200 மீ., 400 மீ., 400 மீ., தடை ஓட்டம், 4*100 மற்றும் 4*400 தொடர் ஓட்டம், 800 மீ., 1,500 மீ., 3,000 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல்.
நாள்: நவ.11, 2013
நேரம்: காலை 9 மணி
இடம்: பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி, பீளமேடு, கோவை.
போட்டி விவரங்கள்: ஒற்றையர், இரட்டையர் இறகுப் பந்து மற்றும் ஒற்றையர், இரட்டையர் மேஜைப் பந்து
No comments:
Post a Comment