கோவை நகரில்,கோவை மேற்கு
என்ற பெயரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்குவதற்கான அரசாணையை தமிழக
உள்துறை கடந்த 27ம் தேதியன்று (எண்:1029) வெளியிட்டுள்ளது.
குனியமுத்தூர், மதுக்கரை, க.க.சாவடி, கோவைப்புதூர், பேரூர், குறிச்சி, ஈச்சனாரி, சிட்கோ, போத்தனூர், கோணவாய்க்கால்பாளையம், சுந்தராபுரம், செல்வபுரம், குமாரபாளையம், செல்வசிந்தாமணி
குளம், ஒத்தக்கால் மண்டபம், தெலுங்குபாளையம், சுப்ரமணியபுரம், மலுமிச்சம்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாவுத்தம்பதி, காருண்யா நகர், தோலம்பாளையம், நாச்சிபாளையம், தேவராயபுரம் மற்றும்
க.க.சாவடி சோதனைச்சாவடி ஆகிய பகுதிகள், இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தின்
எல்லைக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டுள்ளன.
கோவைப்புதூரில்
வி.எல்.பி., இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகில், இந்த அலுவலகம்
அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இன்னும்
ஒரு மாதத்துக்குள் இந்த அலுவலகம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து
வைக்கப்படும். அநேகமாக, ஜனவரி மாதத்திலிருந்து இந்த அலுவலகம் செயல்படத் துவங்கும்.
No comments:
Post a Comment