வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள அடையாள
ஆவணமாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டு தாரர்கள், ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள அரசு
இணையதளத்தில் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
http:/210.212.62.90:8080/newfco/cardvalidity.do
என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, வெள்ளை மற்றும்
மஞ்சள் நிறமுடைய ரேஷன்கார்டு தாரர்கள்; ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேற்சொன்ன இணையதள முகவரியில் சென்று குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்தால் அதில்
ரேஷன்கார்டுக்கான காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு வரும். அதை அப்படியே பதிவிறக்கம்
செய்து ரேஷன்கார்டில் ஒட்டிக்கொள்ளலாம். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு
ஒட்டப்பட்டுள்ள "N' ரேஷன்கார்டுகள் புழக்கத்திலுள்ள ரேஷன்கார்டுகளாகவே கருதப்படும்.
இணையதள
வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன்கார்டு தாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் மாதந்தோறும் நடத்தப்படும், பொது வினியோக திட்ட
குறைதீர் கூட்டத்தில் ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இன்டர்நெட் முகவரியில் புதுப்பிக்க கடைசி நாள்: 31.01.2014
No comments:
Post a Comment