நாளை (மார்ச்-1) ஜி.ஆர்.டி கல்லூரியில் நிகழும் அவ்தார் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வட்டியும் முதலும்’ புகழ் ராஜூ முருகன் உரையாற்ற இருக்கிறார். மேலதிக விபரங்களுக்கு:http://avtarfest.com/2013/index.html
Thursday, 28 February 2013
கோவையில் ராஜூ முருகன்!
நாளை (மார்ச்-1) ஜி.ஆர்.டி கல்லூரியில் நிகழும் அவ்தார் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வட்டியும் முதலும்’ புகழ் ராஜூ முருகன் உரையாற்ற இருக்கிறார். மேலதிக விபரங்களுக்கு:http://avtarfest.com/2013/index.html
டாக்டர். ராஜேந்திரா கே. பச்சோரி பேசுகிறார்!
பசும்புலரி - சூழலியல் அமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற சூழலியலாளர் டாக்டர். ராஜேந்திரா கே. பச்சோரி உரையாற்றுகிறார். கொடீசியா வளாகத்தில் வரும் மார்ச் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
Pasumpulari - Monthly meet on March 11 at Codissia Trade Fare Center (COINTEC), Coimbatore
Presided by Nobel laureate Dr.Rajendra K.Pachauri
Wednesday, 27 February 2013
Monday, 25 February 2013
Sunday, 24 February 2013
Friday, 22 February 2013
அன்றாட வாழ்வில் அறிவியல்
Buzz கிளப் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்வு 'Science in our life' அவிநாசி சாலையிலுள்ள தாமோதர் சென்டரில் பிப்-23 (சனி) மாலை 4:30 மணியளவில் நடைபெற இருக்கிறது. சுவையான அறிவியல் விளையாட்டுக்கள், அறிவியல் பரிசோதனைகள், கலந்துரையாடல்கள் நிகழ இருக்கின்றன. மாணவர்கள், குழந்தைகள் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வு. மேலதிக விபரங்களுக்கு: 9894040227
Monday, 18 February 2013
Saturday, 16 February 2013
Secret Race - கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
25வது ஆண்டு விழாவினையொட்டி சிகரகம் அறக்கட்டளை கல்லூரி மாணவர்களுக்கான ‘Secret Race' எனும் போட்டியினை நடத்த இருக்கிறது. போட்டியாளர்கள் ஐந்து கட்ட சவால்களைத் தாண்டி வெற்றி இலக்கினை அடையும்படி நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைமைப் பண்பு, நிர்வாகத்திறன், குழுமனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் போட்டி இருக்கும். அவிநாசி சாலையில் உள்ள மீனாட்சி அரங்கில் மார்ச் 17 முதல் மார்ச் 24 வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
Friday, 15 February 2013
WATER நாட்கம்
தி மெட்ராஸ் பிளேயர்ஸ்
நாடகக்குழு ‘Water’ எனும் நாடகத்தினை இன்று (பிப்ரவரி-16) மாலை 6:30 மணியளவில் ஜி.ஆர்.டி
ஆடிட்டோரியத்தில் நிகழ்த்துகிறது. கோமல் ஸ்வாமிநாதனின் புகழ்பெற்ற ‘தண்ணீர் தண்ணீர்’
நாடகத்தின் ஆங்கில வடிவம் இது. மேலதிக விபரங்களுக்கு: 99945-00046
இதயத்தின் தாகம்
ஸ்ரீ கிருஷ்ணா
ஸ்வீட்ஸ் வழங்கும் ‘இதயத்தின் தாகம்’ மன அமைதிக்கான பஜன் மற்றும் சத்சங்கம். பிப்ரவரி-17ம்
தேதி ஞாயிறு கிக்கானி பள்ளி வளாகத்திலுள்ள சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியத்தில் மாலை
6:30 மணிக்கு நடைபெறுகிறது.
Thursday, 14 February 2013
ஜிசிடி கல்லுரியில் TEDxGCT
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி இளங்கலை மாணவர்களும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்யும் TEDxGCT நிகழ்ச்சி. Amagi Media-ன் நிறுவனர் பாஸ்கர் சுப்ரமண்யம், ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
இடம்: ராஜலெக்ஷ்மி அரங்கம், ஜிசிடி கல்லூரி வளாகம்
நாள்: பிப்ரவரி - 16
நேரம்: 2:30 மதியம்
தொடர்பு: ரம்யா - 94877-24669
செம்பையில் கே.ஜே.ஜேசுதாஸ்!
பாலக்காட்டுக்கு அருகேயுள்ள சிற்றூர் செம்பை. இங்குள்ள பார்த்தசாரதி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசி சங்கீத உற்சவம் நடைபெறும். செம்பை கர்நாடக சங்கீத ஜாம்பவான் வைத்தியநாத பாகவதரின் சொந்த ஊர். அவர் பாடகர் ஜேசுதாஸின் குருநாதர்.
ஒவ்வொரு ஆண்டு சங்கீத உற்சவத்தின்போதும் கே.ஜே.ஜேசுதாஸின் கச்சேரி செம்பையில் நிகழ்வது வழக்கம். அது கேஜேஜேயின் வழக்கமான கச்சேரிகளிலிருந்து மாறுபட்டதும் தனித்துவமானதும் ஆகும். ஒரு மாணவன் எந்நாளும் மனதில் வைத்து பூஜிக்கும் தன் குருவிற்கு மானசீகமாக கலையினால் மரியாதை செய்வதைப் போல இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இந்த அபாரமான கச்சேரியினைக் கேட்க ரசிகர்கள் செம்பையில் கூடுவதுண்டு. வரும் பிப்ரவரி-17ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
கோவையிலிருந்து கூப்பிடு தூரம் என்பதால் கோயம்புத்தூர்க்காரர்கள் இந்த இசை மழையை ரசிக்கலாம்
வணக்கம் கோயம்புத்தூர்!
வணக்கம்!
இலக்கியம், ஆன்மிகம், நடனம், இசை, வர்த்தகம், சுயமுன்னேற்றம், நாடகம், கண்காட்சி, வினாடி வினா, பயிலரங்கங்கள் என நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இவை குறித்த அறிவிப்புகளை, இன்னபிற விபரங்களை எளிய தமிழில் அனைவரும் அறிந்துகொள்ள உதவும் நோக்கிலே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகநூலில் http://www.facebook.com/KovaiHappening என்ற முகவரியிலும்
ட்வீட்டரில் https://twitter.com/KovaiHappenings என்ற முகவரியிலும் எங்களை நீங்கள் பின் தொடரலாம்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)