மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகமும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகமும் இணைந்து நடத்தும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி ‘காந்தி சில்ப் பஜார்’ வரும் மார்ச் 25-ம் தேதி வரை பார்க் கேட் மைதானத்தில் நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மானேஜ்மெண்ட் அசோஷியேசனின் ஆண்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை (பிப்-25 திங்கள்) 6:30 மணியளவில் ஹோட்டல் ரெஸிடென்சியில் நடைபெற இருக்கிறது. IRIZAR-TVS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. தீபக் தாகூர் கலந்துகொள்கிறார்.