Thursday, 14 February 2013

செம்பையில் கே.ஜே.ஜேசுதாஸ்!


பாலக்காட்டுக்கு அருகேயுள்ள சிற்றூர் செம்பை. இங்குள்ள பார்த்தசாரதி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசி சங்கீத உற்சவம் நடைபெறும். செம்பை கர்நாடக சங்கீத ஜாம்பவான் வைத்தியநாத பாகவதரின் சொந்த ஊர். அவர் பாடகர் ஜேசுதாஸின் குருநாதர்.

ஒவ்வொரு ஆண்டு சங்கீத உற்சவத்தின்போதும் கே.ஜே.ஜேசுதாஸின் கச்சேரி செம்பையில் நிகழ்வது வழக்கம். அது கேஜேஜேயின் வழக்கமான கச்சேரிகளிலிருந்து மாறுபட்டதும் தனித்துவமானதும் ஆகும். ஒரு மாணவன் எந்நாளும் மனதில் வைத்து பூஜிக்கும் தன் குருவிற்கு மானசீகமாக  கலையினால் மரியாதை செய்வதைப் போல இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இந்த அபாரமான கச்சேரியினைக் கேட்க ரசிகர்கள் செம்பையில் கூடுவதுண்டு. வரும் பிப்ரவரி-17ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

கோவையிலிருந்து கூப்பிடு தூரம் என்பதால் கோயம்புத்தூர்க்காரர்கள் இந்த இசை மழையை ரசிக்கலாம்

1 comment: