Tuesday, 9 April 2013

பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வணிகமுறையிலான பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 17 மற்றும் 18 தேதிகளில் நடக்கிறது.வேளாண் பல்கலை அறிக்கை: உலரவைக்கப்பட்ட பழங்கள், பலவகை பழங்களின் ஜாம்கள், பலரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், பழப்பார், பழமிட்டாய் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்தொழில்நுட்ப பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் 1000 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். 

நேரில் வந்து பயிற்சி கட்டணத்தை செலுத்த இயலாதவர்கள் வரைஓலை மூலம் முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-3 என்ற, முகவரிக்கு அனுப்பவேண்டும்.பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் பெயரை வரும் 17ம் தேதிக்கு முன்பு பதிவு செய்ய வேண்டியது அவசியம். மேலும் விபரங்களுக்கு 0422-661 1268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment