"தினமலர்' நாளிதழ் சார்பில், கோவையில் முதன்முறையாக, "டிபிஎல்' பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், வரும் 21ம் தேதி, கோலாகலமாக துவங்குகிறது. "தினமலர்' பிரீமியர் லீக் (டிபிஎல்) கிரிக்கெட் போட்டி, "நாக்-அவுட்' முறையில், 20 ஓவர்களை கொண்டு நடத்தப்படுகிறது.
டென்னிஸ் பந்தில் நடத்தப்படும் போட்டியில், 12 - 18 வயதுள்ளவர்கள் பங்கேற்கலாம். 1995 ஏப்., முதல் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். விளையாட்டில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. ஒரு அணிக்கு 14 பேர் மட்டுமே, பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். வீரர்களின் வயது குறித்து, பள்ளி மற்றும் ஏதேனும் சான்றிதழுடன், பெற்றோரின் ஒப்புதல் கடிதம், இரண்டு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை, காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கோவை சுந்தராபுரத்திலுள்ள "தினமலர்' அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். போட்டியில் பங்கேற்போர், தங்கள் அணியின் பெயருடன் விண்ணப்பிக்க வேண்டும். வீரர்கள், போட்டிக்கான உபகரணங்களை தாங்களே கொண்டு வர வேண்டும்.
வெற்றி பெறும் அணிக்கு, 10 ஆயிரம் மற்றும் சுழற்கேடயம், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 5,000, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே, 3,000, 2,000 வழங்கப்பட உள்ளது. ஆட்ட நாயகன் விருதுக்கு, ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, 97919 09228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment