பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை
வழங்குவதற்கான திறனாய்வு தேர்வு நடக்க உள்ளது.
ஊரக
பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8 ம் வகுப்பு தேர்வில் 2012-13 கல்வியாண்டில்
50 சதவீதம்
மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உதவித்தொகை
வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அங்கீகாரம்
பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான தேர்வு வரும் செப்., 22 ல் நடக்கிறது.
உதவித்தொகை பெற விரும்பும் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்ப
படிவத்தை www.peps.tn.nic.in என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் வருவாய் சான்றிதழ் இணைத்து பள்ளி தலைமை
ஆசிரியர் கையொப்பத்துடன் ஆகஸ்ட் 2 க்குள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பவேண்டும்.
அப்போது, தேர்வுக்கட்டணம்
ரூபாய் ஐந்தும், சேவைக்கட்டணம் ரூபாய் ஐந்தும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம்
செலுத்தவேண்டும்.
No comments:
Post a Comment