Showing posts with label கோவையில் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. Show all posts
Showing posts with label கோவையில் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. Show all posts

Monday, 15 July 2013

கோவையில் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திறனாய்வு தேர்வு நடக்க உள்ளது.

ஊரக பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8 ம் வகுப்பு தேர்வில் 2012-13 கல்வியாண்டில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.



நடப்பாண்டிற்கான தேர்வு வரும் செப்., 22 ல் நடக்கிறது. உதவித்தொகை பெற விரும்பும் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்ப படிவத்தை www.peps.tn.nic.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் வருவாய் சான்றிதழ் இணைத்து பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் ஆகஸ்ட் 2 க்குள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பவேண்டும். அப்போது, தேர்வுக்கட்டணம் ரூபாய் ஐந்தும், சேவைக்கட்டணம் ரூபாய் ஐந்தும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம் செலுத்தவேண்டும்.