கோவை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்காக புகார் தெரிவிக்க மக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு அலைய தேவையில்லை. அனைவரிடமும் மொபைல்போன் வசதியுள்ளதால், இருந்த இடத்தில் இருந்தே புகார் தெரிவிக்க, பிரத்யோக சேவை துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மக்களிடம் அதிக வரவேற்புள்ளது.
கோவை மாநகராட்சிக்கு "எஸ்.எம்.எஸ்' மூலம் புகார் தெரிவிக்கும் முறை, கடந்த ஏப்.,ல் துவங்கப்பட்டது. "எஸ்.எம்.எஸ்' புகாருக்கு மாநகராட்சி நிர்வாகம் 92822 02422 என்ற மொபைல்போன் எண்ணை அறிவித்துள்ளது.
"குப்பை அகற்றவில்லை, சாக்கடையில் அடைப்பு, தெருவிளக்கு எரியவில்லை, குடிநீர் சப்ளை இல்லை' போன்ற பிரச்னைகளை "எஸ்.எம்.எஸ்' மூலம் புகாராக தெரிவிக்க, மொபைல்போனில் வார்டு எண், தெரு பெயர், என்ன பிரச்னை என்பதை "டைப்' செய்து பிரத்யோக மொபைல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment