கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ்
கிளப் சார்பில், “ரேலி ஆப் கோயமுத்தூர் – 2013” கார் பந்தயம் கோவையில் வரும் 19ம் தேதி
முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
நடப்பாண்டில் எஸ்.யு.வி.,க்கு
என தனிப்பிரிவாக போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில்
மொத்தம் 28 கார்கள் மற்றும் மூன்று எஸ்.யு.வி., வாகனங்கள் பங்கேற்கின்றன. வரும் 19ம்
தேதி, கோவை ஜென்னீஸ் கிளப்பில், போட்டியில் பங்கேற்கும் வாகனங்களுக்கு பரிசோதனை முகாம்
நடக்கிறது.
இவ்வாண்டு போட்டி
முழுவதும் செட்டிபாளையத்திலுள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே மைதானத்தில் நடத்தப்படும்.
வரும் 20ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில், தமிழக வேளாண் அமைச்சர் தாமோதரன்,
மேயர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
வரும் 20, 21 தேதிகளில்,
போட்டி துவங்கும் இடத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் கேத்தனூரிலுள்ள காற்றாலை மைதானம்
வரை, இரண்டு ஸ்டேஜ்களில் போட்டி நடத்தப்படும். மலேசிய வீரர்கள் கரம்ஜித்சிங், ஜக்தேவ்சிங்
ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கப்படும் பார்வையாளர்கள், பார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனுடன்,
ரேஸ் டிராக்கில், காரில் சுற்றிவர வாய்ப்பு வழங்கப்படும்.
No comments:
Post a Comment