வேளாண்துறை
தமிழக வேளாண்துறை பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தினை துவக்கியுள்ளது. இத்திட்டத்தில் மண் பரிசோதனை, பயிர் தேர்வு, பயிர் முறைகள், அறுவடை மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் விலை நிர்ணயம் போன்ற அனைத்து தொழில் நுட்பங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டம் ஒவ்வொரு விவசாயின் நிலத்தை பண்படுத்தலில் இருந்து துவங்குகிறது.
இதன் வாயிலாக வேளாண்துறை, வேளாண் பல்கலை, மண் பரிசோதனை நிலையம், கடன் மற்றும் நிதி நிறுவன அமைப்புகள், உரம், பூச்சி மருந்து,விதை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள், பண்ணை கருவி தயாரிப்பு நிறுவனங்கள், வேளாண் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை அனைத்து விவசாயிகளும் வருங்கால விவசாயத்தினை திட்டமிட்ட முறையில், லாபகரமாக நடத்திட தங்கள் விபரங்களை வேளாண் துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
இதற்கான கணக்கெடுப்பு பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட 12 இடங்களில் நடக்கிறது.
இன்று 3ம் தேதி ஆனைகட்டி ஜம்புகண்டி சமுதாயகூடம், 4ம் தேதி பிளிச்சி காரணவிநாயகர் கோவில், 5ம் தேதி கோவனூர் விநாயகர் கோவில், 8ம் தேதி கஸ்தூரிபாளையம் மகாலட்சுமி கோவில், 9ம் தேதி புதுப்புதூர் கனரா வங்கி பயிற்சி மையம், 10ம் தேதி நஞ்சுண்டாபுரம் பஞ்சாயத்து அலுவலகம், 11ம் தேதி சின்னமத்தம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம், 12ம் தேதி கூடலூர் வனமாரியம்மன் கோவில், 15ம் தேதி நரசிம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம், 16ம் தேதி துடியலூர் பன்னிமடை டியூகாஸ் அலுவலகம், 17ம் தேதி சோமையம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம்,18ம் தேதி வீரகேரளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது.
No comments:
Post a Comment