நேரு கல்விக் குழுமம்
சார்பில் ‘ஏரோவிங்ஸ்-2013’ என்ற பெயரில் விமானவியல்துறை சார்ந்த கோடை கால சிறப்பு பயிற்சி
முகாம் நடைபெறுகிறது.
விமானவியல்துறை
சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இம்முகாமில் கேவின் க்ரூ,
விமானப்போக்குவரத்து கட்டுப்படுத்துதல், விமான பாதுகாப்பு, கேபின் பாதுகாப்பு உள்ளிட்ட
பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். இதில் சேர,
பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.
விமானவியல் துறை
வல்லுனர்கள் பயிற்சி அளிப்பதுடன், விமான கட்டுமானம், விமான கருவிகள் அறிமுகப்பயிற்சி,
ரேடியோ நேவிகேஷன், இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனர். பயிற்றுவித்தல் மட்டுமின்றி, செயல்முறை விளக்கப்பயிற்சியும்
அளிக்கப்படுவது இம்முகாமின் கூடுதல் சிறப்பு.
நாள்:
03-06-2013 to 08-06-2013
நேரம்: காலை
10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: நேரு விமானவியல்
கல்லூரி வளாகம், குனியமுத்தூர், கோவை.
விபரங்களுக்கு:
0422 – 2251147, 2251148, 88700 05337.
பயிற்சிக்கான விண்ணப்பங்கள்
பெற வேண்டிய முகவரி:
451/டி, பாலக்காடு
மெயின் ரோடு,
குனியமுத்தூர்,
கோவை – 641 008.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முதலில் அனுப்பப்படும் 100 விண்ணப்பங்களுக்கு
மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
No comments:
Post a Comment