Saturday 10 August 2013

தொழிற்கல்வி வேலை வாய்ப்பு

மேல்நிலை வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவை தேர்வு செய்து படித்த மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சியை கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் கோவை, திருப்பூர் முதன்மை கல்வி அதிகாரிகள் இணைந்து, தொழில் பழகுநர் (அப்பரன்டிஸ்ஷிப்) பயிற்சிக்காக நேர்காணல் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமுக்கு 2011, 2012, 2013 ஆகிய கல்வியாண்டுகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம்.

வரும் 23ம் தேதி புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நேர்காணல் முகாம் நடக்கிறது. இதில், டி.என்.எஸ்.டி.சி., பி.எஸ்.ஜி மருத்துவமனை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, என்.எஸ்.ஐ.சி டெக்னிக்கல் சர்வீஸ் சென்னை, பிரேக்ஸ் இந்தியா மற்றும் பல முன்னணி பன்னாட்டு நிறுவங்கள் பங்கேற்று, மாணவர்களை தொழிற்பயிற்சிக்காக தேர்வு செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment