Wednesday, 10 April 2013

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி


ஹிண்டுஸ்தான் இலவச குடிமைப்பணித்தேர்வுகள் பயிற்சி மையம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு  பத்து நாட்கள் இலவச பயிற்சி வழங்க உள்ளது. பயிற்சிகள் ஏப்ரல் 13ம் தேதி முதல் கோவை ஹிண்டுஸ்தான் கலை அறிவியியல் கல்லூரி (நவ இந்தியா) வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

தொடர்புக்கு: பி. மணிகண்டன் 96262 31319
http://www.hindusthaniasacademy.com/

சித்திரை கலை விழா



ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் லயன்ஸ் கிளப் (324 - பி1) ஒருங்கிணைந்து வழங்கும் ‘சித்திரை கலை விழா’ தமிழ் இயல் இசை நாட்டிய நிகழ்ச்சிகள்.

12-04-2013 அன்று பிரபல இசை கலைஞர் திருமதி. செளமியாவின் தமிழிசை

13-04-2013 அன்று கவி. வ.வே.சு, ஆகாசம்பட்டு சேஷாசலம், ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்கும் முத்திரை கவியரங்கம்

14-04-2013 அன்று டாக்டர்.பத்மா சுப்பிரமணியம் அவர்களின் மாணவியர்களின் நாட்டியம்

தினமும் மாலை 6:30 மணிக்கு. சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில்.

3D Clay Miniature Workshop


தி ஹிண்டு - கோடை நாடக விழா!


Tuesday, 9 April 2013

பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வணிகமுறையிலான பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 17 மற்றும் 18 தேதிகளில் நடக்கிறது.வேளாண் பல்கலை அறிக்கை: உலரவைக்கப்பட்ட பழங்கள், பலவகை பழங்களின் ஜாம்கள், பலரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், பழப்பார், பழமிட்டாய் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்தொழில்நுட்ப பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் 1000 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். 

நேரில் வந்து பயிற்சி கட்டணத்தை செலுத்த இயலாதவர்கள் வரைஓலை மூலம் முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-3 என்ற, முகவரிக்கு அனுப்பவேண்டும்.பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் பெயரை வரும் 17ம் தேதிக்கு முன்பு பதிவு செய்ய வேண்டியது அவசியம். மேலும் விபரங்களுக்கு 0422-661 1268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் - 2013


ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் - 2013

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் ராமாயாண பாராயணம், லட்சார்ச்சனை, நாமஸங்கீர்த்தனம், திருக்கல்யாண மஹோத்சவம், நாட்டியாஞ்சலி உள்ளிட்ட  ஏராளமான ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நூல் வெளியீட்டு விழா


’மக்களின் உரிமைகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டமும்’ நூல் வெளியீட்டு விழா!

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், மு. கிருட்டிணசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இடம்: கிருஷ்ணகவுண்டர் திருமண மண்டபம், மணியக்காரம்பாளையம்

நாள்: 10-04-2013 - புதன்கிழமை

நேரம்: மாலை 5:00 மணி