அரசு பாலிடெக்னிக்
கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது; வரும் 21ம் தேதி நிறைவடைகிறது.
அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில்
சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜி., எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜி., கார்மென்ட் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்ட் அண்ட் கன்ட்ரோல் இன்ஜி., மெக்கானிக்கல் இன்ஜி., மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் ஆகிய டிப்ளமோ
படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில் இன்ஜி., கம்ப்யூட்டர் இன்ஜி., இ.இ.இ., எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜி., மெக்கானிகல் இன்ஜி., புரொடக்ஷன் இன்ஜி., ஆகிய இளநிலை டிப்ளமோ படிப்புகளும், முதுநிலை ஆட்டோமொபைல் இன்ஜி., படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது.
இப்படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரு கல்லூரிகளிலும் நேற்று
துவங்கியது.
பொதுப் பிரிவினர் 150 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ் நகல் சமர்ப்பித்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment