தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டில்லி, குர்கான், பரிதாபாத், மீரட், அரியானா, மகாராஷ்டிரா, குஜராத், தாதர் நகர்
உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள் மற்றும் தற்போது
ராணுவத்தில் பணியாற்றுவோரின் குடும்பத்தினர் பணிக்கு சேரும் வகையில், ஆட்கள் தேர்வு
நடத்த ராணுவ தலைமையகம் முடிவு செய்துள்ளது.
* "இன்பான்ட்ரி” ராணுவ வீரர்(பொது பணி): கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 45
மதிப்பெண்களுடன் தேர்ச்சி. ஒவ்வொரு
பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 17 வயது ஆறு மாதங்கள்
நிறைவடைந்தவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.
* "சோல்ஜர் டிரேட்ஸ்மென்” (மியூசீசியன்) பணி: கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி மட்டும் போதுமானது. வயதுவரம்பு: 17 வயது ஆறு மாதங்கள்
நிறைவடைந்தவர்கள் முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள்.
* தேர்வில் பங்கேற்பவர்கள் "அசல்” ஆவணங்கள் கொண்டு வருதல் அவசியம்.
நாள்: ஜூலை 5, 2013
நேரம்: காலை 7 மணி
இடம்: வெலிங்டன்
எம்.ஆர்.சி. வளாகம், நீலகிரி மாவட்டம்.
மேலும் விபரங்களுக்கு, 0423-228 2602 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment