தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் டில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் "வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு' குறித்த கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் ஜூலை 3 முதல் 23 வரை நடக்கிறது. பயிற்சியில் விவசாயிகள் சரியான தீர்மானங்கள் எடுக்க உதவும் கம்ப்யூட்டர் மென்பொருள், இணையதள சேவைகள், வீடியோ மூலம் கலந்துரையாடல், சமுதாய வானொலி, சந்தை நிலவரம் அரிய உதவும் தகவல் தொழில்நுட்பம், தானியங்கி, வர்த்தகத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வானொலி நிலையம், மொபைல் போன் மூலம் வேளாண் விரிவாக்கச் சேவைகள் போன்ற தலைப்புகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.
இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment