Monday 2 September 2013

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி



தமிழ்நாடு வேளாண் பல்கலை

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

வேளாண் பல்கலையில் தேனீக்கள் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் செப்., 6ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில் மாதம்தோறும் தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. செப்., 6ல் நடக்கும் பயிற்சி முகாமில், தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்தச் சேர்க்கையின் மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு வேளாண் பூச்சியியல் துறைக்கு வந்து சேர வேண்டும். பயிற்சியில் கலந்துகொள்ள 250 ரூபாய் நேரடியாக செலுத்த வேண்டும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்கும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை 641003 என்ற முகவரியிலும், 0422 6611214 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment