Sunday 10 March 2013

சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா



கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இன்று (மார்ச்-11 திங்கள்கிழமை) முதல் 18-ம் தேதி வரை ஆண்டு விழா நடைபெற உள்ளது. கொடியேற்று விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் என்.நடராஜன் பங்கேற்கிறார்.
  12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவிலில் காட்சி வேலியும் பறையெடுப்பும் நடைபெற உள்ளது. கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தா.மலரவன், வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
  13-ஆண் தேதி கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஐயப்பனுக்கு களபாபிஷேகம் நடைபெற உள்ளது. 14-ஆம் தேதி சிறப்பு பூஜைகள், குச்சுப்புடி, மோகினியாட்டம், பரதநாட்டியம் ஆகியவை நடைபெற உள்ளன. கோவை மேயர் செ.ம. வேலுசாமி, கிழக்கு மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
  15-ஆம் சிறப்புப் பூஜைகளும் பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. 16-ஆம் தேதி நடைபெறும் உற்சவ பலி நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
   17-ஆம் தேதி பள்ளி வேட்டையில் ஐயப்பசுவாமி யானை மேல் அமர்ந்து பள்ளிவேட்டைக்கு எழுந்தருளுவார். 18-ஆம் திங்கள்கிழமை 5 யானைகளுடன் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி கோவிலில் நிறைபறை வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment